தபால் மூல 7 லட்சத்து 5ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி

Report Print Ajith Ajith in சமூகம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த வாரத்தில் சுமார் 7 லட்சத்து 5ஆயிரம் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர்.

இதன்படி வரும் ஜூலை 14ஆம் 15ஆம் திகதிகளில் மாவட்ட செயலக பணியாளர்கள், தேர்தல் அலுவலகங்கள் காவல்துறை மற்றும் படை முகாம்கள், திணைக்களங்கள் மற்றும் சுகாதார சேவையினர் தமது வாக்குகளை அளிக்கவுள்ளனர்.

அவர்கள் ஜூலை 16ம் மற்றும்17ம் திகதி நண்பகல்வரை தமது வாக்குகளை அளிக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பங்களையும் தவறவிடுபவர்கள் ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு 7லட்சத்து 53ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைத்தன.

எனினும் அதில் 7லட்சத்து 4ஆயிரத்து 85 விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டன. 47ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் குறைபாடுள்ள விபரங்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.