இலங்கையில் இன்று இதுவரையில் 94 கொரோனா தொற்றாளர்கள் - முழுமையான விபரங்கள்

Report Print Tamilini in சமூகம்

இலங்கையில் இன்று இதுவரையில் 94 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 94 புதிய கொரோனா தொற்றாளர்களில்

76 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலும்,

14 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களெனவும்

ஏனைய நான்கு பேரும் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் மொத்தம் 2,605 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.