வவுனியாவில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா குடும்பத்தினர் தனிமைப்படுத்தல்

Report Print Steephen Steephen in சமூகம்

கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினை இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பி சென்றுள்ளார்.

அதனையடுத்து மேற்கொண்ட கொரோனா மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கெரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார், மகள், உறவினர் உட்பட நான்கு பேர் பேருந்தில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .