வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெளியாகியிருந்தன.

இதன்போது பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 32 பேருக்கும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 55 பேருக்கும் என மொத்தமாக 87 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலுள்ள இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.