இராணுவ அதிகாரிக்கு கொரோனா! கண்டி குண்டசாலையில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலில்

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி - குண்டசாலை பிரதேசத்தில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அர்ஜூன திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி கடந்த 25ஆம் திகதி விடுமுறையில் வந்துள்ளதுடன் 11 நாட்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அவரது வீடு அமைந்துள்ள பிரதேசத்தில் அவருடன் பழகிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் திலக்கரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் பல பகுதிகளில் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.