உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை - அக்கரைப்பற்று பகுதியில் சந்தேகநபரின் இல்லத்தில் வைத்து இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அம்பாறை பொலிஸ் தலைமையக வாகனம் திருத்தும் நிலைய பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு,மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொண்ட டி.என்.ஏ. மரபணு பரிசோதனை பொருந்தவில்லையென அவரது சிறிய தந்தையார் கைது செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video