ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கவிருந்த கூட்டங்கள் இரத்து! சுகாதார பிரிவின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுகாதார சட்டத்திட்டங்கள் மீறப்படுவது அவதானிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கூட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடத்தப்படவிருந்த கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது..