கந்தகாடு முகாமில் மேலும் 14 பேருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் இவர்களில் தற்போது 639 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய ஆயிரத்து 981 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் கொரோனா காரணமாக இலங்கையில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.