கொடுப்பனவை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் ஆபத்தை பொருட்படுத்தாது செய்த சேவைக்கான கொடுப்பனவை வழங்குமாறு கோரி, கண்டி தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்கள் கடமைகளில் இருந்து விலகி, வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள வீதிக்கு வந்து தமது எதிர்ப்பை முன்வைத்தனர்.

கடந்த காலத்தில் தம்மை சுகாதார வீரர்களாக போற்றி பாடல்களை பாடியதாகவும், ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வசதிகளை வழங்குவதாகவும் கூறினாலும் தாம் செய்த சேவைக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என கண்டி தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வேண்டியது துதிப்பாடலோ, ஆடம்பர ஹோட்டல்களில் தங்கும் வசதிகளோ அல்ல எனவும் தமக்குரிய கொடுப்பனவை சரியான விதத்தில் வழங்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஆங்காங்கே கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையின் தாதியர்களின் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.