ராஜாங்கனைய பகுதியின் பல பிரதேசங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா பரவல் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனைய பகுதியின் ஒன்று, மூன்று மற்றும் 5 ஆகிய பிரதேசங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் இலங்கையரொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மீண்டும் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது நாட்டில் தலைதூக்கியுள்ளது.