வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கணவன், மனைவி காயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காணி உரிமையாளர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தரான ஒருவரிடமிருந்து 1986ம் ஆண்டு பூவரசங்குளம், கந்தன்குளம் பகுதியிலுள்ள மூன்று அரை ஏக்கர் காணியினை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் தனது மனைவியுடன் குறித்த காணியின் பாதை விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சம்பவங்களை பார்வையிடுவதற்காக நேற்று மாலை அங்கு சென்றனர்.

இதன்போது அரச உத்தியோகத்தர் அவருடைய மனைவி ஆகியோருக்கிடையே காணிக்கு பாதை விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதி காணியை அபகரிக்க முயன்றபோது இரு தரப்பினருக்கிடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பில்மனைவி மற்றும் கணவன் ஆகியோர் மேற்கொண்ட தாக்குதலில் காணியின் உரிமையாளர் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.