இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு!

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 2,646 ஆக உயர்ந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 654 நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதனிடையே, நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக பதிவாகியுள்ளது. வைரஸ் தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.