தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தறை - பிட்டபெந்தர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

விடுமுறைக்காக வீடு சென்றவர் ஒருவாரம் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் அவர் பிட்டபெந்தர நகரத்தில் பொது மக்கள் செல்லும் பல இடங்களுக்கு சென்றுள்ளார். அத்துடன் பொதுத் தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நெருக்கமாக இருந்த 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொறு செய்தி வெளியிட்டுள்ளது.


you may like this video