கொரோனா தொற்று குறித்து உண்மையை மறைக்கும் அரசாங்கம்: அனுரகுமார

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

அரசியல் லாபம் கருதியே அரசாங்கம் நாடு கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிவிட்டதாக காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொற்று தொடர்பான தீவிரத்தை அரசாங்கம் மறைக்க முயன்ற நிலையில் பொதுமக்களும் சுகாதார ஒழுங்கு விதிகளை மறந்து விட்டனர் என்று அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நோயில் இருந்து குணமாவோரின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டும் வகையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் வெளியிடும் பீசீஆர் பரிசோதனை அறிக்கைகளை அரசாங்கம் வேண்டுமென்றே மாற்றியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து அந்த பல்கலைக்கழகம் பீசீஆர் பரிசோதனை நடவடிக்கைகளில் இருந்து விலகவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதையும் அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.