கொழும்பில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா? உண்மை நிலவரம் வெளியானது

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் நுகேகொட, கொழும்பு மற்றும் அவிசாவளை பகுதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த செய்திகள் வெறும் வதந்தியே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உண்மை நிலவரத்தை சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், தங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு பிரிவு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த நபர் கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி விடுமுறை பெற்று கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வருகை தந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video