கொழும்பு மற்றும் கம்பஹாவில் கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது

Report Print Steephen Steephen in சமூகம்

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக கடமையாற்றி நபருக்கும், அந்த முகாமில் கடமையாற்றிய இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.

குறித்த ஆலோசகர் கம்பஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் என்பதுடன் அவரது சாரதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பரிசோதனைகளில் உறுதியானது. இந்த நபர் கடந்த 7 ஆம் திகதி கம்பஹா நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில் சாட்சியாளராகவும் ஆஜராகி இருந்துள்ளார். அத்துடன் அவரது மனைவியுடன் மகரகமை புற்றுநோய் மருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.

ஆலோசகரின் சாரதி பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளதுடன் விருந்துகள் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றிய ஹோமாகமை மற்றும் கொடகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் பழகிய 7 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு வந்திருந்த போதே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பல பொது இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கும் சென்று வந்துள்ளார். இதனால், அந்த மருத்துவ நிலையத்தின் மருத்துவரும் அவரது உதவியாளரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


you may like this video