கொழும்பின் புறநகர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவயில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லக்ஷபத்தி, எர்னஸ்ட் பிலேஸ் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேவை செய்யும் மொரட்டுவ லக்ஷபத்திய எர்னஸ்ட் பிலேஸ் விலாசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

அவர் மொரட்டுவையை சேர்ந்த நபர் என அவரது விலாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபரின் குடும்பத்தினர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்த பிரதேசத்தில் கொரோனா பரவும் நிலைமை ஒன்று இல்லை என மொரட்டுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலம் தெரிவித்துள்ளது.


you may like this video....