வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் கொவிட்-19 விழிப்புணர்வு

Report Print Theesan in சமூகம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை வடமாகாணத்தில் முற்றாக கட்டுப்படுத்தும் நோக்குடன், வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த செயற்பாடானது வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பொது இடங்கள், அலுவலகங்கள் பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள், மற்றும் முச்சக்கரவண்டிகளில் இவ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் நகர்பகுதிகள், கல்விநிலையங்கள், பொது இடங்களில் இவ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ் விழிப்புணர்வு செயற்பாடானது தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.