முறிகள் விற்பனை மோசடி - சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேப்பேச்சுவல் டர்சரிஸின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் என்று சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு செயலாளர் நிசாரா ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் 25ஆம் திகதியன்று தமக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.

இந்த முறிகள் ஏலவிற்பனையில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.