கொரோனா தொற்று - கலவானையில் சுமார் 300 வியாபார தளங்கள் மூடப்பட்டது

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா அச்சம் காரணமாக பொலநறுவை மாவட்டத்தில் இதுவரை 647 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பிராந்திய சுகாதார சேவை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட தொற்றை அடுத்து அதன் தொடர்புகள் தொடர்பான சந்தேகத்திலேயே இந்தளவு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு 2 ராமநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் தொலைதொடர்பு நிலையம் நேற்று கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பை கொண்டிருந்த ஒருவர் குறித்த அலுவலகத்துக்கு வந்துசென்ற நிலையிலேயே அலுவலகம் மூடப்பட்டது.

இதனையடுத்து அலுவலகம் கிருமிநீக்கம்செய்யப்பட்டது. இரத்தினபுரி கலவானையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் இன்று நண்பகல் நகரின் சுமார் 300 வியாபார தளங்களும் மூடப்பட்டன.