கொரோனாவிடம் இருந்து தப்புவதற்கு IDH அறிவுறுத்தல்கள் வழங்கியதா? பொது மக்கள் விசேட அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதற்காக IDH வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஆலோசனை என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவும் ஆவணம் போலியாதென கொழும்பு IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துளள்ளார்.

அந்த அறிக்கை தொடர்பில் இன்றைய தினத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு எந்தவொரு ஆலோசனை அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை எனவும் அது முற்றிலும் போலியானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vit C-1000 அல்லது விட்டமின் ஈ மாத்திரைகளை உட் கொள்ளுமாறும் காலை 10 - 11 மணி வரையான காலப்பகுதியினுள் 15 - 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும் எனவும், ஒரு முறை ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 1.5 லீற்றர் நீர் பருகுமாறும், அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் pH அளவு 5.5 இலிருந்து 8.5 மாற்றமடையும் என்பனால் வைரஸை தோற்கடிப்பதற்கு pH அதிகமாக கொண்ட உணவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த போலி அறிக்கை தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.