யாழிற்கு விஜயம் செய்த சமல் ராஜபக்ச! நாகவிகாரையில் வழிபாடு

Report Print Sumi in சமூகம்

ஜனாதிபதியின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், யாழ். நாகவிகாரை விகாராதிபதியையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் சரசாலையில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு இன்று வருகை தந்திருந்த அவர், யாழ்.நாகவிகாரை விகாராதிபதி விமலஸ்ரீ தேரரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.