யாழில் 33 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பழைய கட்டடம் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோ கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்தவரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சந்தேகநபரையும் முற்படுத்தியுள்ளனர்.