இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை பிரதேசங்களை விடுவித்த வரலாறு

Report Print Banu in சமூகம்

இராணுவத்தினரின் அச்சுறுத்தலையும் தாண்டி தொடர்ச்சியாக போராடி எமது மக்கள் தங்கள் இடங்களை மீட்டுள்ளனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுமையாகவே இராணுவத்தின் கட்டுப்பட்டுக்கில் இருந்துவந்த காங்கேசன்துறை, மயிலிட்டி, வசாவிளான், மாவிட்டபுரம், தெல்லிப்பளை போன்ற பகுதிகளை விடுவிக்க இப்பகுதிமக்கள் 1990ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஒருமுறை அந்த போராட்டம் மிகப்பெரியளவில் நடந்தபொழுது ரணில் விக்ரமசிங்க கூட வந்து கலந்து கொண்டார். இதன்போது இராணுவத்தினரின் உளவுத்துறையினர் வந்து அச்சுறுத்தியுள்ளனர்.

போராட்டத்த்தில் கலந்துகொண்ட இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளனர். இருந்த போதும் எம்மது மக்கள் தொடர்சியாக போராடிவந்தனர் என்று கூறியுள்ளார்.