லங்காபுர பிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு PCR பரிசோதனை

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலநறுவை, லங்காபுர பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்ட ஆயிரம் பேரிடம் PCR பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றின் முடிவுகள் கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இரவு மாத்திரம் குறித்த கொரோனா நோயாளிக்கு அருகில் செயற்பட்ட 325 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகினால் பயணத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.