தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு உதவிய அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா

Report Print Steephen Steephen in சமூகம்

சஹ்ரான் ஹசீம் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர்களான அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் உதவி கிடைத்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாய்ந்தமருது அலியார் சந்தியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் அல் ஜாமத் அமைப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவான சஹ்ரான் ஹாசீம் தலைமறைவாக இருந்தவாறு அமைப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சஹ்ரான் ஹாசீமின் ஆதரவாளராக இருந்து வந்துள்ள ஆமி மொய்தீன், சிப்லி பாருக் என்ற அரசியல்வாதியின் பாதுகாப்பாளராக கடமையாற்றினாரா என ஜனாதிபதி ஆணைக்குழு, நிலந்த ஜயவர்தனவிடம் வினவியுள்ளதுடன் அவர் ஆம் என பதிலளித்துள்ளார்.