இயக்கச்சியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 166 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 166பேரம் இன்றையதினம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்தான் நாட்டில் தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரூபாய் வணிக சூரிய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார்.