வவுனியாவில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகர்ப்பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் சுயேட்சை குழுக்களின் தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களை வியாபார வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கும் ஆதரவாளர்கள், வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களை வர்த்தக, வியாபார நிலையங்கள் ,வங்கிகளுக்கு விநியோகிப்பவர்களுக்கு கொரோனா நோய் இனம் காணப்பட்டால் அவர்கள் சென்ற வர்த்தக நிலையங்கள், வங்கிகள் என நகரை முழுமையாக முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதை கவனத்திற்கொண்டு பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களுக்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தி வருவதுடன் அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு வவுனியா நகர்ப்பகுதியில் நேற்றையதினம் வியாபார வர்த்தக நிலையங்களுக்கு தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்த சிலர் அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.