விரக்தி மனநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வாருங்கள்! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறைகூவல்

Report Print Sumi in சமூகம்

ஏதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,விரக்தி மனிநிலையில் இருந்து விலகி வாக்களிக்க வாருங்கங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் கட்சிகளை தெரிவுசெய்யுமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்காக அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடியவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும்.

இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் எட்டமுடியாமல் போன ஒற்றுமையை தேர்தலுக்கு பின்னராவது கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

முப்பது வருட வரலாற்றில் இழந்தவைகள் பெரிது, அவற்றின் கைமாறு இன்று இல்லாவிட்டால் என்றாவது கிட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் மௌனிக்கப்பட்டு 10ஆண்டுக்கள் சென்ற நிலையில் தேர்தல் ஒன்று எதிர்கொள்ளப்படுகிறது.

தமிழ் மக்களின் சுயாதிபத்தியத்துக்காக சர்வதேசத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை உந்துவது மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் விடயங்களில் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெளிவாகவே உள்ளது.

எனினும் கடந்த 10ஆண்டுக்களில் எதுவும் நடக்கவில்லை இந்தநிலையில் வடக்கில் நிலவும் சமய, சாதீய முரண்பாடுகள் ம்ற்றும் வறுமை என்பவற்றை பயன்படுத்தி பௌத்த நாட்டை வலியுறுத்தும் தென்னிலங்கை கட்சிகளும் அவர்களின் முகவர்களும் வடக்கில் களமிறங்கியுள்ளனர். மறுபுறத்தில் தமிழ் தேசியத்துக்காக

போராடுவதாக கூறும் கட்சிகள் இன்று உட்பூசல்களாலும் முரண்பாடுகளாலும் சிதறுண்ட நிலையில் தேர்தலை எதிர்கொள்கின்றன.

எனவே தமிழ் மக்கள் அனைத்தையும் பகுப்பாய்ந்து ஆளுமைகளை தெரிவு செய்து வாக்களிக்கவேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.