மூன்று நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை

Report Print Ajith Ajith in சமூகம்

எதிர்வரும் மூன்று நாட்களில் மதுபான விற்பனை தடை செய்யப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 3ஆம் திகதி நிக்கினி பூரணை தினமாகையால் மதுபான விற்பனை தடைசெய்யப்படுகிறது.

இதனையடுத்து தேர்தல் தினமான ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன்கிழமை மற்றும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய நாட்களிலும் மதுபான விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மதுவரித்திணைக்கள ஆணையாளர் ஆரியதாச போதரகம பிறப்பித்துள்ளார்.

இதன்படி மதுபான விற்பனையங்கள், விருந்தகங்கள் மற்றும் ஏனைய இடங்களிலும் மதுவிற்பனை தடைசெய்யப்படுகிறது.

இதனை மீறுவோர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித்திணைக்கள பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.