கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பும் மோசடி

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்களை இத்தாலிக்கு அனுப்பும் மோசடி நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

போலி ஆவணம் தயாரித்து இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு இலங்கை பணியாளர்களை அனுப்பும் பிரதிநிதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் சில காலங்களாக இடம்பெற்று வருவதாக குற்ற விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.