பொலனறுவைச் சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலை வீசிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Report Print Rakesh in சமூகம்

பொலனறுவைச் சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலை வீசிய குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் வீசப்பட்ட கஞ்சாவும், புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலனறுவையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரைப் பொலனறுவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.