வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Report Print Ajith Ajith in சமூகம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதிக்கு தேர்தலுக்கு முன்னர் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது சாட்சியங்களாக கொண்டு வரப்பட்ட இருவரையும் விடுவிக்கும் கோரிக்கையும் சட்டமா அதிபரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல்களின் போது தாமே சாரதியாக இருந்ததாகவும், கிளிநொச்சியில் இருந்து தங்கம் கொண்டு வந்தபோது சாரதியாக இருந்ததாகவும் கூறி இருவரைக்கொண்டு செய்தியாளர் சந்திப்பொன்று 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இது விசாரணைகளின் போது புனைப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பு என்ற அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் ராஜித மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.