ஷானி அபேசேகரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Report Print Murali Murali in சமூகம்

பிந்திய செய்தி....

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு மணி நேர விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர நீதிமன்றில் ஆஜர்!

கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கம்பஹா நீதவான் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால், குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தரார்.

இந்நிலையில் அவர் 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.