கொரோனா தொற்று - சற்றுமுன்னர் வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் லங்காபுர பகுதியில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2815 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், நோய் தொற்றிலிருந்து 2391 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.