யானையின் தாக்குதலுக்குள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

Report Print Murali Murali in சமூகம்

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை தாக்கியது. அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.