ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 335 பேர் நாடு திரும்பினர்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் காத்திருக்கும் இலங்கையர்களில் 335 பேர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஏமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களை தவிர கட்டாரில் இருந்து 14 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தமது தொழில்களை இழந்துள்ளதுடன் அவர்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் உடனடியாக நாடு திரும்ப முடியாத பிரச்சினையையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.