நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

Report Print Mubarak in சமூகம்

புனித தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளினை இன்று முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஹஜ் பெருநாளினை அமைதியான முறையில் நாடளாவிய ரீதியில் கொண்டாடி வருகின்றனர்.

சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் அமைதியான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்று வருகிறது. காலையில் பெருநாள் தொழுகைகளை பள்ளிவாயல்கள்,திடல் தொழுகை என தொழுகை நடாத்தப்பட்டு வருகின்றன.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்,கிண்ணியா,மூதூர், முள்ளிப் பொத்தானை,கந்தளாய்,புல்மோட்டை, ரொட்டவெவ பிரதேசங்களில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மிகவும் விமர்சையாக சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.

செய்தி - ஹஸ்பர் மற்றும் அப்துல் சலாம்

அம்பாறை

கல்முனை நற்பிட்டிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக சமூக இடைவெளிகள் பேணப்பட்டு இடம் பெற்றுள்ளது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதியில் இஸ்லாமிய பிரசார மையம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றுள்ளது.

செய்தி - வருணன்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லீம் பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களில் இடம் பெற்றுள்ளன.

இதன் போது நாட்டு மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டியும் கொரோனா நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்குமாரும் வேண்டி துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.

செய்தி - நவோஜ்

வவுனியா

இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

வவுனியா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த தொழுகை நிகழ்வு பட்டானிச்சூர் குடா வயல் திடலில் மௌலவி ஏ. தஸ்னீம் (தைமீ) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிகளவான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி - தீசன்

மன்னார்

புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாயல்களிலும் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி சமூக இடைவெளிகளை பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி- ஆஷிக்