இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் காலமானார்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் M. S. செல்லசாமி தமது 95வது அகவையில் இன்று காலமானார்.

அவரது குடும்பத்தினர் இதனை அறிவித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசில் முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைவராக இருந்த காலத்தில் அந்த காங்கிரசின் பலமிக்க செயலாளராக M. S. செல்லசாமி விளங்கினார்.

M. S. செல்லசாமி, தலவாக்கலை, வட்டகொடை - மடக்கும்புரயை பிறப்பிடமாக கொண்டவர்.