ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 335 பேர் நாடு திரும்பல்! கட்டாரிலிருந்து 14 பேர் வருகை

Report Print Rakesh in சமூகம்
43Shares

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 648 எனும் விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 14 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவையின் QR 668 எனும் விமானத்தில் அவர்கள் வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளிலிருந்தும் வந்த இலங்கையர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.