போதைவஸ்து கடத்தல் முக்கியதாரியான குடு அஞ்சுவின் உதவியாளர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
39Shares

போதைவஸ்து கடத்தல் முக்கியதாரி என அறியப்படும் குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, குற்றத்தடுப்பு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

குடு அஞ்சுவின் உதவியாளர் கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த பல வாரங்களாக இலங்கையில் போதைவஸ்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதில், போதைவஸ்து கடத்தல்காரார்களுடன் தொடர்புடைய பல பொலிஸாரும் அடங்குகின்றனர்.

இதற்கிடையில் இன்று காலை தெமட்டகொடையில் பெருந்தொகை டொலர்கள் உட்பட்ட பணத்தொகை மீட்கப்பட்டது.

இது போதைவஸ்து மூலம் பெறப்பட்ட பணம் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.