பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்

Report Print Ajith Ajith in சமூகம்
97Shares

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியானது கிலோகிராம் ஒன்றுக்கு 35 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதியமைச்சின் தகவல்படி இந்த இறக்குமதி அதிகரிப்பு நேற்று இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி இன்று முதல் கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாவாக இருக்கும்.

இந்த நடவடிக்கை உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.