கல்முனையில் குழந்தை பிரசவித்த சில மணித்தியாலயங்களில் தாயொருவர் உயிரிழப்பு!

Report Print Varunan in சமூகம்
435Shares

கல்முனை வைத்தியசாலையில் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில மணித்தியாலயங்களில் இறந்தமை தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வெல்லாவெளி - பாக்கியல்ல,சின்னவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி என்ற கர்ப்பிணி தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் குழந்தை பேறுக்காக கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தைப்பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.தொடர்ந்து குழந்தையை பிரசவித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறையினை அடுத்து மீண்டும் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதியை பெற்றுதர கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையையும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தலையீடு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது உயிரிழந்த தாய்க்கு 3 பிள்ளைகள் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.