கொழும்பு புளுமென்டல் ஊடாக கொழும்பு துறைமுகத்துக்கு செல்லும் வழியில் தடை ஏற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை காவல்துறையினர் நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுள்ளனர்.
எனினும் துறைமுக பணியாளர்களின் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய நிறுவனம் ஒன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட துறைமுக கிழக்கு தளத்தை மீண்டும் இலங்கை துறைமுக அதிகாரசபை கையேற்கவேண்டும் என்ற கோரிக்கையே பணியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் உறுதிமொழி வழங்கியபோதும் அது எழுத்தில் தரப்படவேண்டும் என்பதே பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை காவல்துறையினருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது