பெண்களுக்காக எழுவோம்; பெண்களுக்காக இணைவோம்! யாழில் இடம்பெறவுள்ள கருத்துப்பகிர்வு

Report Print Dias Dias in சமூகம்

பெண்களுக்காக எழுவோம்; பெண்களுக்காக இணைவோம் என்ற தொனிப்பொருளில் கருத்துப்பகிர்வொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கருததுப் பகிர்வானது நாளைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது பெண்களின் அரசியல் சமூக பிரதிநிதித்துவம் தொடர்பில் பெண் சிவில் சமூக பிரதிநிதிகள் கருத்துப் பகிரவுள்ளனர்.

இந்த நிகழ்வினை மகளிர் அபிவிருத்தி நிலையங்கள், மகளிர் ஐக்கிய நாணய சங்கங்கள், மாதர் கிராம முன்னேற்ற சங்கம், உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், மகளிர் கமக்கார அமைப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் அமைப்பு இணைந்து ஒருங்கிணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.