நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில் வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன் இது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.