இலங்கையில் 365 ஆக குறைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்
111Shares

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய இதுவரையில் 365 பேர் மாத்திரதே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவை - லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.