கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையாளும் நடவடிக்கைகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக இன்று முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் நடைபெற்றது.
பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து போராட்டத்தை கைவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு துறைமுக தொழிற்சங்கங்கள் நடந்த 23 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தன.