கொரோனா வைரஸ் தொற்றிய பெண் பிரசவித்த குழந்தையின் பரிசோதனையில் வெளியான தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றாளரான கர்ப்பணி பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

இலங்கை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், கர்ப்பிணி தாய் ஒருவர், கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் நேற்று குழந்தை ஒன்றை பிரசவித்தார்.

குழந்தை ஆரோக்கியமாக இருந்த போதிலும் குழந்தையின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுளளது.