முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்றின் முன்னிலையில் இன்று அவர் சரணடைந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவானால் கடந்த 22ம் திகதி பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.